புதிய வசூல் அறிவிப்பை வெளியிட்ட வாரிசு படக்குழு.. வியப்பில் ரசிகர்கள்

ci 3 11 22 vaarisu
ci 3 11 22 vaarisu

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘வாரிசு’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு சுவரொட்டி வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக சுவரொட்டி வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.