எப்போது திருமணம்?: பிரபாஸ்

i3 5 1
i3 5 1

நடிகர் ராணா – மிஹீகா திருமணம் அறிவிப்பை தொடர்ந்து நடிகர் பிராபாஸ் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது. பாகுபலி படத்தை வைத்து, பிரபாஸ் – ராணா – அனுஷ்கா மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், தனது திருமணம் குறித்து நடிகர் பிரபாஸ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் “நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது எப்போது என எனக்கு தெரியாது. எனது திருமணத்தில் என்னைவிட ஊடகங்கள் தான் அதிக அக்கறை காட்டுகின்றன”, என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியின் போது அனுஷ்கா மற்றும் நிகாரிகா ஆகியோருடனான காதல் கிசுகிசு குறித்து கேட்டதற்கு, சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் பிரபாஸ்.