125 டொலர் வசூலித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

i3 29
i3 29

கொரானோ ஊரடங்கை பல நாடுகள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. அதிக பாதிப்பில்லாத சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டது. மால்கள், தியேட்டர்கள் ஆகியவை திறக்கப்பட்டன.

துபாயில் சில தியேட்டர்கள் மே மாதம் 27ம் தேதி திறக்கப்பட்டன. அங்கு சில ஆங்கிலப் படங்கள், ஹிந்தி, மலையாளம், தமிழ்ப் படங்கள் ஆகியவை திரையிடப்பட்டன.

30 சதவீதப் பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டரில் கடும் கட்டுப்பாடுகளுக்குப் பின் அனுமதிக்கப்ட்டனர். ஊரடங்கிற்குப் பிறகான தியேட்டர் திறப்பிற்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லை என்றே சொல்கிறார்கள். புதிய படங்கள் இல்லை என்பதும் ஒரு காரணம், கொரானோ தொற்று பயமும் மற்றொரு காரணம்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்திப் படங்கள் 2000, 1000 யுஎஸ் டாலர்கள் வசூலித்துள்ளன. தமிழ்ப் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் இரண்டு தியேட்டர்களில் 125 டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளதாம்.

வழக்கமான முழுமையான திறப்பு, திரையீடு நடந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு குறைவான வசூலைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள். உலக அளவில் ‘நார்மல்’ என வந்தால் மட்டுமே திரையுலகத்திற்கு புத்துயிர் கிடைக்கும்.