14 மில்லியன் பேர் பின்தொடரும் ஸ்ருதிஹாசன்

i3 2 2
i3 2 2

சமூக வலைத்தளங்களில் டுவிட்டரை விட இன்ஸ்டாகிராம் தளத்தைத்தான் நடிகைகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அடிக்கடி பதிவிட்டு அவர்களது ரசிகர்களுக்கான தகவல்களைக் கொடுத்து வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் 14 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார். அது குறித்து, “உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஒவ்வொருநாளும் என் மீது அன்பு செலுத்துகிறீர்கள். வரலாற்றில் இப்போது விசித்திரமான காலம் போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் விதவிதமான எமோஷன் இருக்கிறது. இந்த சமயத்தில் உங்களுடன் தொடர்புடன் இருக்கவும் எனது வாழ்க்கையைப் பகிரவும் அற்புதமான உணர்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

கொரானோ ஊரடங்கில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிட்ட நடிகைகளில் ஸ்ருதிஹாசனும் ஒருவர்.