சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் மீண்டும் நிறுத்தம்

TV Serial Shooting Permission granted for tv serial shooting

கொரோனா பரவலையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள்  ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிறுத்தப்படவுள்ளன.

இந்நதியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கம் அறிவிக்கப்பபட்டதைத் தொடர்ந்து சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சின்னத்திரை தொழிலாளர்கள் கடுமையான பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சில நிபந்தனைகள் மற்றும் படப்பிடிப்பு விதிமுறைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு அடைப்பு அமுல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்படவுள்ளதால், சின்னத்திரை தொடர் வெளியாகாது என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.