காட்டிற்குள் ஜாலி ட்ரிப் அடித்த தமன்னா… லாக்டவுனில் இது அவசியமா…?

1595564054 104

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்ப்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது காட்டிற்குள் மலை ஏற செல்வதாக கூறி பேக் மாட்டிக்கொண்டு ஜாலியாக செல்லும் புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு “இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். எல்லோரும் லாக்டவுனில் பாதுகாப்பாக இருக்கவேண்டிய தமன்னா இப்படி ஜாலி ட்ரிப் அடித்துள்ளது நல்லது இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.