சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக மனோபாலா!

தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பது போல் சின்னத்திரை நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

சின்னத்திரை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் ஏகமனதாக நடிகர் மனோபாலா தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் சின்னத் திரைக்காக என்றும் உழைப்பேன் என்று உறுதி அளித்த மனோபாலாவை நடிகர் சௌந்தரராஜா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.