தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளிவருவது வழக்கமான ஒன்று.

ஆனால் இந்த வருடம் பரவியுள்ள கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளிவருதல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறி உள்ளது.

இதன் காரணமாக பல திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடி வழியாக வெளியாகி வருகின்றன. தீபாவளி விருந்தாகும் சில திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் ஹாட்ஸ்டார் உள்ளிட்டவைகள் மூலமாக வெளியாக உள்ளது.

அப்படி தீபாவளி விருந்தாக வெளியாகும் திரைப்படங்கள்;

சூரரை போற்று – நவம்பர் 12
மூக்குத்தி அம்மன் – நவம்பர் 14
நாங்க ரொம்ப பிஸி – சன் ரீவியில்

அட்லி தயாரிப்பில் அந்தகாரம் மற்றும் ஜெயம்ரவி நடிப்பில் பூமி உள்ளிட்ட திரைப்படங்களையும் தீபாவளி ரிலீசாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.