கல்யாணம் குறித்த பார்வை இப்போது மாறியுள்ளது – கீர்த்தி சுரேஷ்

நடிகைகள் அவ்வளவு சீக்கிரம் திருமண பந்தத்தில் இணைவது இல்லை. காரணம் திருமணம் ஆனால் சினிமாவில் சாதிக்க முடியாதோ என்ற பயம் சிலரிடம் உள்ளது.

ஆனால் சமந்தா போன்ற நாயகிகள் திருமணம் முடிந்தும் நடித்து கலக்கி வருகிறார்கள். அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில், முன்பு திருமணம் குறித்த பார்வை வேறொரு மாதிரி இருந்தது, இப்போது மாறிவிட்டது.

கல்யாணம் செய்துகொண்டும் நடிகைகள் நடித்து சாதித்து வருகிறார்கள், இப்படி பேசுவதால் நான் இப்போது திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்பது இல்லை.

ஆனால் கல்யாணம் குறித்த பார்வை இப்போது எனக்கு மாறியுள்ளது என கூறியுள்ளார்.