நான் சிறந்த நடிகன் அல்ல- சூர்யா

herova zerova surya stills
herova zerova surya stills

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 12ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனது படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார் சூர்யா. இது குறித்து சூர்யா பேசும்போது,

நான் சினிமா துறையில் இருக்கிறேன் என்றோ அல்லது நான் புகழ் பெற வேண்டும் என்றோ படங்களில் நடிக்கவில்லை. நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் பிரமாதமான நடிகன் அல்ல. என்னால் கேமரா முன்பு உடனடியாக நடிக்க தெரியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தில் வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.

நான் நினைத்து பார்க்காத இடம் சினிமாவில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே நல்ல வாய்ப்புகள் வரும்போது மெனக்கெட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு புது முயற்சியும் பயத்தை கொடுக்க வேண்டும்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரை போற்று படம் புதிய முயற்சியாக இருக்கும். அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடிக்கிறேன். பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் வாடிவாசல் என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.