சூர்யாவை பார்த்து பயந்தேன் – அபர்ணா பாலமுரளி

NTLRG 20180809170715709145
NTLRG 20180809170715709145

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் நடித்த அனுபவத்தை கூறும் நடிகை அபர்ணா,

சூரரைப் போற்று படம் மீது எனக்கு பெரிய நம்பிக்கைக்கு காரணமே கதாபாத்திரம் தான். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தயாராவது அபாரமாக இருக்கும்.

இந்த பொம்மி கதாபாத்திரம் காலகட்டங்களை தாண்டி நிற்கும். சிறு வயதில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கதை படிக்கும் காலகட்டத்தில் அவரை பார்த்து பயந்தேன். படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப அமைதியாக இருந்தார் என்று கூறியுள்ளார்.