பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி!

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரஞ்சீவி கூறியதாவது: ஆச்சார்யா படப்பிடிப்புக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டதில் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.

கடந்த ஐந்து நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவிலிருந்து மீள்வது குறித்த தகவல்களை விரைவில் வெளியிடுகிறேன் என்றார்.