தல அஜித்திற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிரபல நடிகை!

valimai ajith 1 1280x720 1
valimai ajith 1 1280x720 1

ஒரு வருடங்களுக்கு மேலாக தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

தல அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித்திற்கு அம்மா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சுமித்ரா நடிக்க உள்ளாராம்.

மேலும் தல அஜித்திற்கு வலிமை படத்தில் இளமை தோற்றம், வயதான தோற்றம் என இரண்டு கெட்டப்புகள் இருப்பதாக வலிமை பட ரகசியத்தை பகிர்ந்துள்ளனர்.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் தல அஜித் இரண்டு கெட்டப்புகளில் வருவதால் இப்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியாகி விட்டார்கள் தல ரசிகர்கள்.

ஃபர்ஸ்ட் லுக் மட்டும் வரட்டும், வெறித்தனமாக ரெக்கார்ட் செய்கிறோம் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.