விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித் அதிக நாட்கள் நடித்துக் கொண்டிருப்பது வலிமை படத்தில் தான்!

ajith valimai 1 1
ajith valimai 1 1

விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித் அதிக நாட்கள் நடித்துக் கொண்டிருப்பது வலிமை படத்தில் தான். கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னமும் 60 சதவிகித படப்பிடிப்பை மட்டுமே தாண்டியுள்ளது படக்குழு.

இடையில் தல அஜித்துக்கு அடிபட்டு படப்பிடிப்பு நின்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் எதிர்பாராத நேரத்தில் கொரானா தாக்கியதால் நின்றுபோன படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஐதராபாத்தில் தொடங்கியது. அங்கேயும் மீண்டும் தல அஜித் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க வலிமை படத்தில் பாதி காட்சிகள் வெளிநாடுகளில் நடப்பது போன்று படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக தற்போது வரை பல நாடுகளில் பர்மிஷன் கேட்டும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கதை களத்தை டெல்லியில் நடப்பது போன்று மாற்றுவதாகவும் படக்குழுவினர் யோசித்து வருவதாக ஒரு பக்கம் கதையைக் கட்டி விட்டனர். ஆனால் உண்மையில் வெளிநாடுகளில் எடுக்கவேண்டிய ஷூட்டிங்கை விரைவில் எடுக்க உள்ளார்களாம்.

அதற்காக தல அஜித் மற்றும் வலிமை படக்குழு விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாம். மேலும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்னர் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் அஜித்.

வலிமை படத்தைப் பொருத்தவரை அஜீத் இதுவரை செய்த பிளான்கள் அனைத்துமே சொதப்பிய நிலையில் இந்த முறையாவது நினைத்தது நிச்சயம் நடக்க வேண்டும் என புதிய உத்வேகத்துடன் இருக்கிறாராம்.

பொங்கலுக்கு படத்தை முடித்துவிட்டு தமிழ் புத்தாண்டிற்கு வலிமை படம் ரிலீஸ் ஆகியே தீர வேண்டும் என படக்குழுவினருக்கு கட்டளையிட்டுள்ளாராம் தல அஜித்.