இன்றைய நாள்(24.12.2020) உங்களுக்கு எப்படி?

senganthal rasipalan 1 4 2
senganthal rasipalan 1 4 2

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் உணர்ச்சி வசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துகொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து போங்கள். பெருமை தேவைப்படும் நாள்.

மிதுனம்

ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். இனிமையான நாள்.

கடகம்

தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தபொருள்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தி யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகாரப்பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.