இன்று உறவினர்களுடன் மனஸ்தாபப் படப்போகும் ராசிக்காரர் நீங்களா?

28
28
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களுக்கு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களுக்கு விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

kadakam

கடகம்: -கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். அக்கம்-பக்கம்   வீட்டாருடன்    சண்டை  சச்சரவு வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி:- கன்னி ராசிக்காரர்களுக்கு மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகஎதிர்ப்புகள் வந்து நீங்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாள்.

thulam

துலாம்:-துலா ராசிக்காரர்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களுக்கு வர வேண்டிய பணம் கைக்குவரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களுக்கு மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்

meenam

மீனம்:- மீன ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.