- மேஷ ராசிக்காரர்களுக்கு பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அசைவ கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
- ரிஷப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
- மிதுன ராசிக்காரர்களுக்கு மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்து காட்டும் நாள்.
- கடக ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரதில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியான நாள்.
- சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல்நலம் பாதிக்கும். மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில்ஒருபெரியபொறுப்புகள்தேடிவரும்.புத்துணர்ச்சி பெருகும் நாள்.
- துலாம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவி கிடைக்கும். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
- தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
- மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
- கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பங்கள் நீங்கி தௌிவு பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் இனிதே முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால்லாபத்தைஅதிகரிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
- மீன ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.