இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ராசிக்காரர் நீங்களா?

24
24
 • மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். லாபம் பெருகும் நாள்.
 • ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
 • மிதுன ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தடைப்பட்ட விஷயங்கள் தற்போது முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள்உங்களை மதித்துப் பேசுவார்கள். நன்மை நடக்கும் நாள்.
 • கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். பொறுமை தேவைப்படும் நாள்.
 • சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாலை 1.40 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
 • கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.
 • துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
 • விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பு வார்த்தைகள் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
 • தனுசு ராசிக்காரர்களுக்கு தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியுடன் செயல்படும் நாள்.
 • மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள் எல்லாம் நீங்கி குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.
 • கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.
 • மீனம் ராசிக்காரர்களுக்கு எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.