இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

01
01
  • மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய திட்டங்கள் நிறை வேறும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை நிர்வாகத்தினரிடம் வெளிப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்கள் இன்று எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில்அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்கள் இன்று சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • கடக ராசிக்காரர்கள் இன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துபேசுவார்கள். அழகும் இளமையும் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
  • கன்னி ராசிக்காரர்கள் இன்று கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். எதிர்பாராத திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்கள் இன்று எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சிறப்பான நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலருக்கு மனசுமாறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்தவைகளில் சில எதிர்பாராத வகையில் பணம் வரும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
  • மகர ராசிக்காரர்கள் இன்றுசந்திராஷ்டமம் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள்வந்து போகும்.  அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்கள் இன்று சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும் நாள்.

  • மீன ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.