இன்று(17.11.2022) பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் ராசிக்காரர் நீங்களா?

maxresdefault
maxresdefault

மேஷம்

நெருக்கடி நிலை மாற நிதியுதவி கிடைக்கும் நாள். நேசித்தவர்கள் தொழில் முன்னேற்றதிற்கு வழிவகுப்பர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். நேற்றுவரை பகையாக இருந்தவர்கள் இப்பொழுது நட்பாக மாறுவர்

ரிஷபம்-

பாசம் காட்டும் உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

மிதுனம்-

நட்பால் நன்மை கிட்டும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக வருமானம் வந்து சேரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு பற்றி தகவல் வந்து சேரலாம்

கடகம்-

வீடு மாற்றங்கள் விருப்பம் போல் நிகழும் நாள். மற்றவர்களை விமர்சிப்பதால் பிரச்சினைகள் உருவாகும். ஆடம்பரப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது

சிம்மம்-

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். சொல்லைச் செயலாக்கிக் காட்ட இயலாது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கடைசி நேரத்தில் கைகூடலாம்.

கன்னி-

சுபச்செய்திகள் வீட்டை முற்றுகையிடும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உத்தியோகம் சம்பந்தமாகக் கடல் தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சி தரும்.

துலாம்-

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வரன்கள் வாயில்தேடி வரும்

விருச்சிகம்-

நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். எந்த ஒரு செயலையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

தனுசு-

வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடும் நாள். வில்லங்கங்கள் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதன் மூலம் மாலை நேரத்தில் பிரச்சினைகள் உருவாகலாம்.

மகரம்-

யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏற்படும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

கும்பம்-

ஆரோக்கியத் தொல்லை அகலும் நாள். அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். தொலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். எதிரிகளை அனுசரித்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

மீனம்-

பிரச்சினைகள் அகலும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.