இன்று (25.08.2020) எந்த ராசியினருக்கு யோகம் அடிக்கப் போகிறது

Daily Prediction Seithi Churul 2
Daily Prediction Seithi Churul 2
aries 01 7
aries 01 7

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே உங்களுக்ககு சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பிரச்சினைகள் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

taurus 02 7
taurus 02 7

ரிஷபம்:–ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.  தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

gemini 03 7
gemini 03 7

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயங்களை நல்லவிதத்தில் முடிப்பீர்கள் வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

cancer 04 5
cancer 04 5

கடகம்:- கடக ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

leo 05 7
leo 05 7

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே உங்கள்  பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்லவரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். போராடி வெல்லும் நாள்.

virgo 06 7
virgo 06 7

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மகிழ்ச்சியான நாள்.

libra 07 7
libra 07 7

துலாம்: -துலாம் ராசிக்காரர்களே நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி அமைதி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு.விலகிச் சென்ற உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். வியாபாரத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

scorpio 08 7
scorpio 08 7

விருச்சிகம்:–விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். கவனமுடன் செயல்படவேண்டி நாள்.

sagittarius 09 8
sagittarius 09 8

தனுசு:- தனுசு ராசிக்காரர்களே உங்கள் எதிர் காலம் பற்றிய கவலைகள் நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

capricorn 10 8
capricorn 10 8

மகரம்:–மகர ராசிக்காரர்களே நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில்  சக ஊழியர்களால்  பாராட்டப்படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

aquarius 11 8
aquarius 11 8

கும்பம்: – கும்ப ராசிக்காரர்களே நீங்கள் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

pisces 12 7
pisces 12 7

மீனம்:-மீன ராசிக்காரர்களே நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.