இன்றைய நாள் (18.09.2020 ) வெள்ளிக்கிழமை உங்களுக்கு எப்படி ?

2020 01 04 at 00 56 20
2020 01 04 at 00 56 20

மேஷம்:

aries 01 4

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கூறும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்:

taurus 02 4

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுப் பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது னம் நாள்.

மிதுனம்

gemini 03 5

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

cancer 04 5

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களை கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

leo 05 5

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி

virgo 06 5

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

libra 07 6

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும் .பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

scorpio 08 5

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.

தனுசு  
sagittarius 09 5

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்
capricorn 10 5

பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கும்பம்:

aquarius 11 1 1
aquarius 11 1 1

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

மீனம்

pisces 12 5
pisces 12 5

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்துபோகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.