சந்திராஷ்டமத்தால் அல்லல் படப் போகும் ராசிக்காரர் நீங்களா?

30
30
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

risapam

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சுட்சமங்களை சொல்லி தருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்

mithunam

.

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களே வீரியத்தை விட காரியம் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து காட்டுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும்

நாள்.

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே  உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

thulam

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராற்றில் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

scorpio 08 6

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.அமோகமான நாள்.

magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.