இன்று பண மழை கொட்டப்போகும் ராசிக்காரர் நீங்களா?

05
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த பணம் தற்போது உங்கள் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். மனநிறைவு கிட்டும் நாள்

kadakam

கடகம்:-கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன உலைச்சல் வீண் டென்ஷன் கவலை ஏற்படும். சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பொறுப்பாக செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக்கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமூகதீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

கன்னி:-கன்னி ராசிக்காரர்களே பிள்ளைகளின் பொறுப்புணர்வுகளை கண்டு பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிறப்பான நாள்.

thulam

துலாம்:-துலாம் ராசிக்காரர்களே எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

scorpio 08 1

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி அன்னியோனம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

thanu

தனுசு:- தனுசு ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பலவிஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் தாமதமாகி முடியும் நாள்.

magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

meenam

மீனம்:- மீன ராசிக்காரர்களே குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புது தொழில்தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.