பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

download 2 5
download 2 5

பச்சை பயிற்றில் விட்டமின்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, ரிபோ புளோவின், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் புரதச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது.

எனவே இந்த பச்சை பயிறை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்

பச்சைப் பயிறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பெறவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் பச்சை பயிறு உதவுகிறது.

ரத்தத்தில் அதில கொலஸ்ட்ரால் இருப்பதால் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

தினமும் வேகவைத்த பச்சைப் பயிறை இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

பச்சைப் பயிறு மாவு, சர்க்கரை, ஆகிய இரண்டையும் பாலில் கலந்து பருகி வர, குழந்தைகள் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். பச்சைப் பயிறு உணவுகளை தினமும் சாப்பிட்டு வர, தோல் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்து உடல் மற்றும் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வர, உடல் பொலிவு மற்றும் தலைமுடி மிருதுவாகும்.