மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்!

ht3372

மணத்தக்காளி கீரையின் தண்டு, கீரை,பழம், அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலுக்கு சத்துணவு பொருட்களை சரியாக அனுப்பிவிடுகிறது.

மணத்தக்காளி கீரையில் போஸ்போரஸ், கால்சியும், இரும்புச்சத்து, வைட்டமின் “எ”, “பி” உள்ளது.

மணத்தக்காளியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த மருத்துவ குணம் உள்ள சத்துணவாகும். மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மணத்தக்காளி.

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச் சார்ந்தது.

தற்போது, அதல் மருததுவ குணங்கள் அதிகம் இருப்பதால், விவசாயில் பயிரிடுகிறார்கள். மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.

இக்கீரை சத்துணவு பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை வெளியேறவும், வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரை. மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள்.

மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது.

மணத்தக்காளியின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்

குழந்தையின்மை பிரச்சனைக்கு

குழந்தையின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வினை இந்த கீரை கொடுக்கிறதுமணத்தக்காளி.கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கருப்பையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி விரைவில் குழந்தை பிறப்பதரற்கான வாய்ப்பினை இந்த கீரை உருவாக்குகிறது.

மலட்டு தன்மையை போக்க

ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனையான மலட்டு தன்மையை போக்கும் அற்புத மருந்தாக இந்த கீரை உள்ளது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், இனப்பெருக்க உறுப்பும் வலிப்பெறும்.

வயிற்றுப் புண்

வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

கருவலிமை

மணத்தக்காளிக் கீரை கருப்பையில் கருவலிமை பெறுவதற்கு உதவுகிறது.

நல்ல உறக்கம் பெற

மணத்தக்காளிக் கீரையை உண்பதால் உடல் களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மேலும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் கண்பார்வை தௌpவு பெறும்.

மூட்டு வீக்கம்

மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.