மஞ்சள் காமாலையை போக்கும் அற்புத கீரை!

download 1 19
download 1 19

புதினா மருத்துவ பயன்கள் பல கொண்டுள்ளது. இதில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும்.

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன.

ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது.

புதினா செடி வகையைச் சார்ந்தது. செங்குத்தாக 60 செமீ வரை வளரக் கூடியவை.

வாசனை நிறைந்த தாவரமாகும். புதினா இலைகள் 5 செமீ வரை நீளமானவை. இலைக் காம்புகள் சிறியதாகவோ, காம்புகள் இல்லாமலோ இருக்கும் இலைகளின் ஓரங்கள் பற்களுடன் காணப்படும். புதினா பூக்கள் சிறியவை.

இளஞ்சிவப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். 1500 முதல் 3000மீ வரை உயரமுள்ள மலைப் பகுதிகளில் இயற்கையாகவும், பயிர் செய்யவும் படுகின்றன.

பழங்காலம் தொட்டே பல்வேறு வகையான அற்புத மூலிகைகளைப் உணவுக்காகவும், மருந்தாகவும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை மற்றும் உணவுப் பொருளாக புதினா கீரை இருந்து வந்திருக்கிறது. முற்காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே அதிகம் உண்ணபட்ட இந்த புதினா இலைகள், தற்போது உலகெங்கிலும் உள்ள மக்களால் புசிக்கப்படுகிறது.

வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக் கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்து சாப்பிட வேண்டும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும்.

மாதவிடாய்

மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

கூந்தல் பளபளக்க

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

எரிச்சல்

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு

புதினாக்கீரை துவையலை வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.