உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்!

bodywaste 251220 400
bodywaste 251220 400

நாம் சாப்பிடும் உணவுகள் மூலம் நமது உடலில் நச்சு கழிவுகள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. நச்சுக்கள் வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்.

நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து  பார்ப்போம்

க்ரீன் டீ

உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளான பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.

இஞ்சி

இஞ்சியின் மருத்துவ குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.

பூண்டு

பூண்டு கூட உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நட்ஸ் பமற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்