கடுகின் மருத்துவப் பயன்கள்

R16182cb8671f1c7ec606e0766dc986b2
R16182cb8671f1c7ec606e0766dc986b2

பொதுவாக நமது அன்றாட சமையலில் தா‌ளி‌ப்பத‌ற்கு நம் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கடுகு.

இதில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது. கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டால் தான் கடுகு “கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது” என்று கூறுவார்கள்.

இதில் போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உள்ளன.

இவற்றை அன்றாடம் உணவில் சேர்ப்பதனால் உடலுக்கு பல நன்மைகள் வழங்குகின்றது. அந்தவகையில் இதில் அடங்கியுள்ள மருத்துவப்பலன்கள் என்பதை பார்ப்போம்.

  • சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.
  • தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.
  • ‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.
  • தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.
  • கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.
  • கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.
  • கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.
  • கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.
  • கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கிடைக்கும்.