குங்குமப்பூவில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி?

04 1499160500 saffron
04 1499160500 saffron

குங்குமப்பூவில் இயற்கையாகவே மிக சிறந்த தூயமையாக்கும் பண்புகளும், பாக்டீரியா எதிர்ப்பு குணமும் கொண்டது. குங்குமப்பூவை கொண்டு சருமத்தை அழகாக்கும் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி பாலில் கலக்கி இந்த கலவையை வாரத்துக்கு இரண்டு முறை முகத்தில் தடவி வந்தால் சிகப்பழகை பெறலாம்.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதனுடன் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர வெயிலால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்: குங்குமப்பூ – 5, நெய் – 1 ஸ்பூன், மயோனைஸ் – 1 ஸ்பூன்.

செய்முறை: குங்குமப்பூவினை மயோனைஸில் 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். அடுத்து நெய்யினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த குங்குமப்பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் 30 நிமிடங்கள் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும்.

அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும்.