தயிரின் அற்புதமான மருத்துவ குணங்கள்

hqdefault 1
hqdefault 1

தயிரில் பல விதமான சத்துக்களும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை உணவில் அதிகம் பயன்படுத்தினர்..

தயிர் சிறந்த புரோபயாடோடிக் உணவுகளில் ஒன்றாகும், இதில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் உள்ளன. புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராட காரணமான இரத்ததில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுகிறது.

பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. பாஸ்பரஸ் மற்றும் கல்சியம் நிறைந்த, தயிர் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது கீல்வாதத்தைத் தடுக்கிறது

மிருதுவான சருமம் மற்றும் மின்னும் தலைமுடியைப் பெற வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தலாம்.

தயிர் சருமத்திற்கும் தலைமுடிக்கும் அழகூட்ட மருந்து பொருளை போல் பயன்படுத்தலாம். தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். தயிர் ப்ளீச்சாக செயல்படுகிறது.