சருமத்தை பராமரிப்பதில் உடனடி பலன்தரும் ஆவாரம்பூ!

1524225263 0965
1524225263 0965

ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து அரைத்து சாறெடுத்து சுண்டக்காய்ச்சி அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவினால் தலையில் ஏற்படும் வழுக்கை மற்றும் முடி உதிர்வை தடுப்பது மட்டுமல்லாமல் முடி நன்கு வளர தொடங்கும்.

ஆவாரம்பூ வேகவைத் தண்ணீர் வடிகட்டி ஆறவைத்து முடி அலசும்போது அந்த தண்ணீர் சேர்த்து முடி அலசினாள் முடி பலபல வென்று இருக்கும் மற்றும் உடல் புத்துணர்ச்சியாகவும் உடல் நிறமும் மாறும்.

பெண்களுக்கு உடல் வறட்சியை நீக்குவதற்கு ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, மற்றும் பால், சேர்த்து உடலில் தேய்த்து நன்கு உலர்ந்த பின் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள வறண்ட சருமம் மற்றும் முகம் மென்மையாகவும் மற்றும் பளிச்சென்று இருக்கும்.

பெண்களுக்கு வறண்ட சருமம் இல்லாமல் இருக்க ஆவாரம்பூ மாற்றும், பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகிய வற்றை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வறண்ட சருமம் இல்லாமல் இருக்கும்.

முடி கொட்டுவதை தடுக்க மற்றும் வளர முடி கொட்டுவதை நிறுத்தவும் தினமும் ஆவாரம்பூ, செம்பருத்தி மற்றும் தேங்காய் பால் சமஅளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டுவதை தடுக்கும் மற்றும் கூந்தல் நன்கு வளரும்.

பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, மற்றும் ஆவாரம் பூ, பூலான் கிழங்கு, இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்து போகும்.