அற்புத பயன்கள் நிறைந்த கரும்புச்சாறு!

201611091128206161 Sugarcane juice of the body dissolves nephrolithiasis SECVPF
201611091128206161 Sugarcane juice of the body dissolves nephrolithiasis SECVPF

குளிர்ச்சியூட்டும், மலமிளக்கியாக செயல்படும். சிறுநீர் பெருக்கியாக செயல்படும். பித்தத்தை நீக்கும். சிறுநீர்க்கடுப்பை குணப்படுத்தும். குடல்புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும். புண்களை ஆற்றும். கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு கலந்து அருந்த வலிப்பு குணமாகும். ஒரு கப் சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.

வெல்லத்துடன் மஞ்சள் தூளை குழைத்து தீப்புண்கள் மேல் தடவ புண் ஆறும். கரும்பு சர்க்கரையும் சிலவகை மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.

கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்திவர பித்தம் குறையும். உள் சூடு, குடல்புண், மூலம் போன்றவை குணமாகும். கரும்புச் சாறுடன் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து அருந்த மலச்சிக்கல் தீரும்.

கரும்பு கற்கண்டு தாதுவலிமையை கூட்டும். பாலில் கரும்பு கற்கண்டு, முருங்கைப்பூ சேர்த்து காய்த்து தினசரி இரவு ஒரு கப் சாப்பிட்டு வர தாது புஷ்டி ஏற்படும். தணலில் சர்க்கரையோடு சாம்பிராணிப் பொடி சேர்த்து புகைக்க கிருமிகள் அழியும், கரப்பான், கொசுத்தொல்லை மறையும்.

நீரில் கரும்பு வேரை இட்டு காய்த்து அரை கப் வீதம் இருமுறை குடிக்க சிறுநீர்க்கடுப்பு தீரும். சர்க்கரை கலந்த நீரால் கண்களை கழுவி வர புகையால் பாதிப்பான கண்கள் நலம் பெறும்.