பசலை கீரையின் பயன்கள்!

0000221 palak keerai 550
0000221 palak keerai 550

பசலை கீரையின் இலைகள் சிறிது சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். பசலை கீரையில் கொடிபசலை மற்றும் சிறுபசலை என இருவகை உண்டு.

கொடி பசலை கொம்புகள், மரங்கள், செடிகள் இவற்றை பற்றியபடி வளரும் தன்மை கொண்டது, சிறுபசலை தரையோடு தரையாக வளரும் தன்மை கொண்டது.

பசலைக்கீரை இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுக்கிறது. இதில் அதிகமாக பச்சையம் உள்ளது. இந்த பச்சையமானது உடலில் கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது.

பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் பருமனாவதில் இருந்து தப்பிக்கலாம்.

பசலைக்கீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும். மேலும் பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு பைட்டோ நியுட்ரியண்ட்டுகள் இருக்கிறது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

பசலைக்கீரையில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவும். இக்கீரை குளிர்ச்சி தன்மை கொண்டாதாகும். அதனால் குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் இந்த கீரையை அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.