உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்து நிறைந்த 9 உணவு வகைகள்

Bone health 696x522 1
Bone health 696x522 1

நாம் நிற்பதற்கு, நடக்க, ஓடுவதற்கு என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலானோர் உடல் எலும்புகள் பலவீனத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

கல்சியம் மற்றும் வைட்டமின் டி குறைப்பாடால், எலும்புகள் பலவீனமாகின்றன. ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அளவு கல்சியம், வைட்டமின் டி சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள 99% கல்சியம் மற்றும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளில் அடங்கியுள்ளது. எனவே பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் கால்சியம் உதவுகிறது.

எலும்பை வலுவாக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்
ஆட்டுக்கால் சூப்
ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கல்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம்.

நண்டு
நண்டில் கால்சியம் சத்து அதிகமுள்ளதால் இது எலும்பை வலுவாக்கும்.

தயிர்
தயிரை சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு தேவையான கல்சியம், வைட்டமின் சத்துக்களை தயிர் சாப்பிடுவதன் மூலம் பெற்று கொள்ளலாம்

சீஸ்
பால் பொருட்களில், கல்சியம் சத்து நிறைந்துள்ள முக்கியமான பொருள் சீஸ். இதில் சிறிதளவு வைட்டமின் டி சத்தும் உள்ளது. சீஸ் பயன்பாட்டை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், உடல் எடை அதிகரித்துவிடும்.

முட்டை
உடலுக்கு தேவையான சத்துக்களை முட்டை வழங்குகின்றது. உடலுக்கு தினசரி தேவையான 6% வைட்டமின் சத்து முட்டையில் உள்ளது.

டியூனா மீன்
டியூனா மீனில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும்.

கீரை வகைகள்
கீரையில் 25% அளவு தினசரி தேவைக்கான கால்சியம் உள்ளது. வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கீரைகளில் வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை, வெங்காயத்தாள் ஆகியவற்றில் கல்சியம் உள்ளது.

பால்
கல்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுப்பொருள் பால்.

ஆரஞ்சு யூஸ்
கல்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி நிறைந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும்.