கர்ப்பப்பையில் உள்ள கோளாறுகளை குணமாக்கும் கூர்மாசனம்!

202003110924298400 Tamil News koormasana SECVPF
202003110924298400 Tamil News koormasana SECVPF

விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி இரு கைகளையும் முதுகின் பின்புறமாக பிடிக்க வேண்டும்.

முதலில் அவ்வாறு பிடிக்க வராது. பின்னர் நன்றாக பழகிய நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும் போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தையும்), நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்று முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளிவிட்டு செய்யவும்.

இந்த ஆசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும்.

அதிக ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல் நீக்குகின்றது. பெண்கள் இளம் வயதிலேயே பயிற்சி செய்தால் கர்ப்பப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும். சுகபிரசவம் உண்டாகும். பெண்களின் அதிக இடுப்பு சதை வயிறுசதை கால் தொடை சதைகளை சரிப்படுத்தி மிடுக்கான, இளமையான தோற்றத்துடன் திகழலாம். குழந்தை பிறந்த பின் முதுகு வலி வராது. அதிக சதை போடாது. நீரிழிவு வராது.

சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்படும். பிரசவமும் சுகமாக நிகழும். சிறுநீர்ப்பையில் கற்கள், பித்தப்பையில் கற்கள் வராது. கற்கள் இருந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால் கரைந்து விடும். கழுத்து முதுகுவலி வராது. குழந்தை பிறந்த பின்பும் இந்த ஆசனத்தை மூன்று மாதம் கழித்து பெண்கள் பயிற்சி செய்யலாம். அதனால் மிக இளமையான உடல் தோற்றம் கிடைக்கும். மனமும் அமைதி பெறும்.