உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவும் கிவி பழம்!

image 2021 03 29 223905
image 2021 03 29 223905

கிவி பலத்தை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சுவாசம் குறித்த பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல ஆய்வுகளில் கிவி பழத்திற்கு மலமிளக்கும் தன்மை இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதனால் இது சுலபமாக மலம் கழிக்க உதவுகின்றது. மல சிக்கலை போக்க, இதனை ஒரு நாளைக்கு இரண்டு என்ற முறையில் நான்கு வாரம் சாபிட்டால் முற்றிலும் இந்த பிரச்சனை குணமடையும்.

ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் எட்டு வாரத்திற்கு தொடர்ந்து இதனை சாபிட்டால் அதிக இரத்த அழுத்தம் குணமடையும். கிவி பழத்தை, தேன், பால், மற்றும் ஓட்ஸ், இவைகளோடு சாலடாக செய்து சாபிட்டால் நல்ல ருசியோடு, நற்பலனையும் தரும்.

கிவி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குறிப்பாக இரத்த அழுத்தம் அதிகம் இருந்தால், அதனை சரி செய்து சீரான அளவிற்கு பெற உதவும். அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்ளும் போது, இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. எனினும், கிவி பழம் அதனை சீர் செய்ய உதவுகின்றது.

கிவியில் அதிகம் நார்சத்து நிறைந்துள்ளதால் இது உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகமாவதையும் குறைத்து, சீரான உடல் எடை பெற உதவுகின்றது.

கண்களுக்கு கீழ் கரும் வளையம் தோன்றுவது இயல்பே. எனினும், இது முக அழகை குறைக்கும். அதனை போக்க, கிவி பழம் பெரிதும் உதவும். கிவி பேஸ்பேக் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதும், கரும் வளையம் மறைந்து, நல்ல சுத்தமான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.