சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும் சில மருத்துவ குறிப்புகள்!

201606011132519841 reason for the delay menstruation SECVPF
201606011132519841 reason for the delay menstruation SECVPF

பல பெண்களுக்கு ஏற்படும் இந்த முறையற்ற மாதவிடாய்க்கு அவர்களின் உடலின் ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாற்றங்களே காரணாமாக இருக்கிறது.

சீரற்ற மாதவிடாய் அறிகுறிகள் இந்த பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகளவு கூடுதல் அல்லது அதிகளவு குறைதல் போன்றவை ஏற்படும். அதோடு பசியின்மை, மனம் அமைதியின்றி அதிக உணர்ச்சிவசப்படும் நிலை போன்றவை சில அறிகுறிகளாகும்.

இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணமிக்க அமிலங்கள் உடலின் ஹார்மோன் சுரப்புகளை சரிசெய்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் கருப்பை சம்பந்தமான அனைத்து குறைபாடுகளையும் போக்குகிறது.

ஏலக்காய்கள் சிலவற்றை பச்சையாகவும் அல்லது பொடி செய்து பால் கலக்காத தேநீரில் கலந்து அருந்தி வர முறையற்ற மாதவிடாய் நீங்கும்.

அன்னாசி பழம் சற்று வெப்பத்தன்மையை கொண்ட அன்னாசி பழங்களை இயற்கையாகவும், சாறு பிழிந்து சாப்பிடும் போது அதில் சிறிது இந்துப்பு என்கிற பாறை உப்பு போட்டு கலக்கி அருந்த முறையற்ற மாதவிடாய் குறைபாடு நீங்கும், கருப்பை இருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும்.

மஞ்சளை சிறிது எடுத்து பால், தேன், நாட்டு சர்க்கரை போன்றவற்றில் கலந்து உண்ண குணம் கிடைக்கும். யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி தினமும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு உடலின் நாளமில்லா சுரப்பிகள் சரியாக இயங்கி, அவற்றால் உடலின் தேவைகளுக்கேற்ற சுரக்கும் ஹார்மோன்களின் சமநிலை பராமரிக்கப்படுகிறது.