பெண்கள் மாதவிலக்கின் போது இந்த பழத்தை சாப்பிட்டால் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுபப்படுத்துமாம்

inner211543494136
inner211543494136

இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடைய இலந்தை பழ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இதில் 74% மாப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது, ஞாபகத்திறனை அதிகரிக்கும் சக்தி இலந்தை பழத்துக்கு உண்டு, எனவே மாணவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

இதேபோன்று எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இலந்தை பழத்தை அதிகம் சாப்பிடவும், ஏனெனில் இதில் கல்சியம் சத்து அதிகமுள்ளது.

இது தவிர பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுடன், பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.

தொடர்ந்து இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டமும் சீராகும், பெண்கள் மாதவிலக்கின் போது சாப்பிட்டால் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.