ஆளி விதையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்!

36378 aali vithai seiyum arputhangal
36378 aali vithai seiyum arputhangal

முளைகட்டிய ஆளி விதையில், அதிலுள்ள பைட்டிக் ஆசிட் நீக்கப்படுவதால், அதன் தாதுக்களை உடல் உட்கிரகிக்கத் தூண்டுகிறது. முளைக்க வைக்க நேரம் இல்லாதவர்கள் இதமான சுடுநீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பின் பயன்படுத்தவும்.

ஆளி விதையை உட்கொள்ளுவதில் மிக எளிதான வழி என்னவென்றால், அரைத்து மாவாக்கவும். மாவாக்க மிக்ஸியே போதுமானது இந்த முறையில் எடுக்கும் போது நிறைய நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கழிவாக வெளியேறிவிடும்.

காலை உணவாக ஸ்மூத்தி, சாலட், ஓட் மீல்ஸ் அல்லது பான்கேக் எடுத்து கொள்ளும் போது ஒரு தேக்கரண்டி பிளாக்ஸ் சீட் மாவை சேர்த்து கொள்ளலாம்.

பிளாக்ஸ் சீட் ஆயில் என்று கிடைக்கிறது அதை பயன்படுத்தும் போது சூடுபடுத்தக்கூடாது. சாலட்டில் ஊற்றி சாப்பிட வேண்டும்.அதே சமயம் ஆளிவிதைகளை வறுத்து சாப்பிடலாம்.இந்த முறையில் சத்துக்கள் வீணாகாது.

தயிர் பச்சடி, யோகர்ட்களில் பொடி செய்த ஆளிவிதைகளை சேர்த்து கொள்ளலாம். சப்பாத்தி, பூரி செய்யும் போது ஒரு நபருக்கு ஒரு தேக்கரண்டி என்ற அளவில் கோதுமை மாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.