விரல் வலியை போக்குவற்கான சில மருத்துவ ஆலோசனைகள்

What is Trigger Finger 640x300 1473127597
What is Trigger Finger 640x300 1473127597

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் கை, கால் விரல்களில் ஏற்படும் வீக்கம், வலி, விரைப்பு தன்மையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். விரல்களில் விரைப்பு தன்மை இருக்கும்போது விரல்கள் வெண்மை நிறமாக மாறும்.

மூட்டுக்களில் வீக்கம், வலி ஏற்படும். ரத்தம் ஓட்டம் இல்லாத நிலையிலேயே வெண்மை நிறம் ஏற்படுகிறது. நொச்சி இலையை பயன்படுத்தி கை, கால் விரல்களில் ஏற்படும் விரைப்பு, வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுக்கவும். ஒரு கரண்டி சாறுடன் சம அளவு தேன் கலந்து காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் வலி, வீக்கம், கைவிறைப்பு தன்மை குணமாகும்.

சர்க்கரை உள்ளவர்கள், தேனுக்கு பதிலாக மிளகுப்பொடி சேர்க்கலாம். சீரகத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை கரண்டி சீரகம், கால் கரண்டி மஞ்சளுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி காலை, மாலை வேளையில் 50 முதல் 100 மில்லி வரை குடித்து வர மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம், வலி, விரைப்பு மறைந்து போகும். சீரகம் அற்புதமான மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மஞ்சள் காமாலை நோய் நீக்கும் தன்மை கொண்டது. அமுக்ரா சூரணத்தை பயன்படுத்தி மருந்து விரல்களில் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு கரண்டி அமுக்ரா சூரணத்தில் சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கரைசலுடன் காய்ச்சிய பால், தேன் கலந்து குடித்து வர கை, கால்கள் விரல்களில் ஏற்படும் வலி குறைய ஆரம்பிக்கும். அமுக்ரா சூரணம் உடல் தேற்றியாகவும், காய்ச்சலை தணிக்க கூடியதாகவும் விளங்குகிறது.

வலி, வீக்கத்தை போக்கும் தன்மை கொண்டது. விரல் வலிக்கான மேல்பூச்சு தைலம் தயாரிக்கலாம். 50 மில்லி விளக்கெண்ணெய், சம அளவு வேப்பெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சீரகப் பொடியை சேர்த்து சூடுபடுத்தவும். இந்த தைலத்தை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு விரல்களில் மசாஜ் செய்தால் கைகளில் ஏற்படும் விரைப்பு தன்மை இல்லாமல் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.