கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்

1524557408 7152
1524557408 7152

பாரம்பரியமான உணவு பழக்கத்தில் கருஞ்சீரகம் பல வழிகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இதை நாம் நறுமணப் பொருளாகவோ, தாளிக்கும் பொருளாகவோ உணவுகளில் சேர்ப்போம்.

இந்த கருஞ்சீரகம் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது. அதனாலே இந்தக் கருஞ்சீரகத்திற்கு ஆயுர்வேதத்தில் மகத்துவமான இடம் உள்ளது.

இருப்பினும் இதில் சில பக்கவிளைவுகளும் உள்ளது. தற்போது கருஞ்சீரகத்தால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

வெகு அரிதாக சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.தாய்ப்பால் கொடுக்கும் போது கருஞ்சீரக விதைகளை எடுத்துகொள்வது பாதுகாப்பானதா என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லை. எனினும் பாதுகாப்பான பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு கருஞ்சீரகம் சேர்த்த உணவு பாதிப்பில்லை. ஆனால் இதை மருந்தாக கருஞ்சீரக விதையை பொடித்து, அல்லது இதன் எண்ணெயை தனியாக என சுயமாக நீண்ட நாட்களுக்கு கொடுக்க கூடாது.

கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து இரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை. அதிகப்படியான கருஞ்சீரக நுகர்வு இரத்தபோக்கு கோளாறுகளை மேலும் மோசமாக்கும்.

நீரிழிவு இருப்பவர்கள் மருந்துகளோடு கருஞ்சீரக விதைகளை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது அது திடீரென்று இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிட செய்யும்.

நீரிழிவு இருப்பவர்கள் கருஞ்சீரக விதைகளை எடுக்கும் போது அவ்வபோது நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கருஞ்சீரகம் இரத்த அழுத்தத்தை குறைக்க செய்யலாம்.

கருஞ்சீரக விதைகளை குறைந்த இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் எடுத்துகொள்ளும் போது அது மேலும் குறை ரத்த அழுத்தத்தை உருவாக்க வாய்ப்புண்டு. கருஞ்சீரக விதைகள் இரத்தம் உறைதலை குறைக்கும். இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். சிலருக்கு தூக்கத்தை அதிகரிக்க செய்யும்.