நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்

1619583670 0873
1619583670 0873

சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் பெரிதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளைத் தள்ளி வைப்பதே நல்லது.

பழச்சாறுகளில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் ஃபுருக்டோஸ் அதிகமாக நிறைந்திருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைக் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

வெள்ளை பிரட், வெள்ளை அரிசி, பாஸ்தா, பேக்கரி உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்கள் போன்ற உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும்

தற்போது கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான யோகர்ட்டுகள் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதிக சர்க்கரையையும் கொண்டுள்ளன. எனவே சர்க்கரை நிறைந்த இம்மாதிரியான யோகர்ட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சுவைத்துப் பார்க்கக்கூட ஆசைப்படக்கூடாது.

நன்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஃபிரெஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும். இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை தூண்டிவிட்டு, உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். எனவே எக்காரணம் கொண்டும் எண்ணெய்யில் பொரித்தெரிக்கும் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நிறைந்த பால் குடிப்பதில் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முழு கொழுப்பு நிறைந்த பாலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருப்பதால், அவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் நிறைவுற்ற கொழுப்புக்கள் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும்.