துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவதால் கிடைக்கும் பயன்கள்!

201707190838323180 durian fruit that increases immunity SECVPF
201707190838323180 durian fruit that increases immunity SECVPF

துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் என பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழத்திலுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருப்பவர்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.