அன்றாடம் மூலிகை சாறு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்!

05 1509896503 5
05 1509896503 5

நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

காலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக தினம் ஒரு இயற்கை சாறுகளை பருகலாம்.

  1. அருகம்புல் சாறு: தேவையானவை: அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் – 2 தேக்கரண்டி, உப்பு – சிறிதளவு, எலுமிச்சைச்சாறு – ஒரு தேக்கரண்டி.

செய்முறை: அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பருகலாம்.

  1. பாகற்காய் சாறு: தேவையானவை: பாகற்காய் – ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு – சிறிதளவு, எலுமிச்சைச்சாறு – ஒரு தேக்கரண்டி.

செய்முறை: பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம்.

  1. நெல்லிச்சாறு: தேவையானவை: நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை – கைப்பிடியளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.