சரும ஆரோக்கியம் மேம்பட உதவும் இயற்கை அழகு குறிப்புகள்!

6080e1d1 7b90 44ed aca1 c787c668f86d 8170 00000323e55d1192
6080e1d1 7b90 44ed aca1 c787c668f86d 8170 00000323e55d1192

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும். உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும். பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

2 தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

1 தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.