ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் வெண்டைக்காய்!

201708260844111487 ladies finger medicinal benefits SECVPF
201708260844111487 ladies finger medicinal benefits SECVPF

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.