அவரைக்காயை உணவுகளில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்

1554276073 0319
1554276073 0319

அவரைக்காய் நுரையீரலுக்கு செல்லும் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான இரும்பு சத்தை கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வியாதிகளிடம் இருந்து நம்மை பாத்து காத்து கொள்கிறது.

உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய அவரைக்காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

புற்று நோய் வராமல் தற்காத்து கொள்ளும் விட்டமின் சி இருக்கும் அவரைக்காய் நன்மை பயக்க கூடியதே. உணவுகளை விரைவில் செரிக்க செய்யும். இதில் இருக்கும் நார் சத்து மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு உறுதி அளிக்க கூடியது.

ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய கூடிய அவரைக்காய், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான மன நிலையை கொடுக்கும் தன்மை கொண்டது.

ரத்த ஓட்டம் சிறப்பாக அமைய தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடிய அனைத்து விட்டமின்கள் கொழுப்பு சத்துக்கள் அடங்கி உள்ள அவரைக்காயை உணவில் எடுத்து கொள்ள பசியை கட்டு படுத்தும் தன்மை கொண்டது.

அவரைக்காய்களில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.