பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும் அன்னாசி பழம்!

image 2021 05 27 220030
image 2021 05 27 220030

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அன்னாசிபழம் பயன்படுகிறது.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் வற்றல்களாக செய்து வைத்து தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊறவைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வாதம், பித்தம் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.

அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பின் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி மறுநாள் காலையில் குடித்து வந்தால் விரைவில் தொப்பை கரைந்து விடும். அதுமட்டும் இல்லாமல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் குறைய தொடங்கும்.