கத்திரிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்!

image 2021 05 28 195711
image 2021 05 28 195711

கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

கத்திரிக்காயில் போலிக் அமிலம் உள்ளது போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் ரத்தத்தில் ஆர்பிசி என ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய கூடியது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவால் ஏற்படும் அனீமியா என்னும் ரத்த சோகை நோயை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

கத்தரிக்காயில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. விட்டமின்கள் சி, பி மற்றும் கே நிறைந்தது நீர்சத்து அதிகம் உள்ளது. பாஸ்பரஸ் கால்சியம் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது கத்திரிக்காயில் உள்ள போட்டோ நூற்றியென்ட்ஸ் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.

கத்தரிக்காயில் உள்ள நார்சத்துகளால் ரத்தத்தில் சர்க்கரை வேகமாக உறிஞ்சப்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சரக்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. கத்தரிக்காய் உடலில் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது கத்திரிக்காயில் அதிக அளவு நார்சத்துக்களும் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன.

கத்திரிக்காய் போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது 100 கிராம் கொண்ட கத்திரிக்காய் 2 மில்லிகிராம் இரும்புச்சத்துக்களை கொண்டது.

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் உள்ளதால் நிறைவாக உணவு உண்டது போல ஒரு திருப்தியை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவின் தேவை அளவை குறைந்து குறைவான அளவு உணவை எடுத்து கொள்வதால் உடல் எடை குறைகின்றது.